தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெய்லர் சுவிஃப்ட் இசைநிகழ்ச்சியில் பிறந்தநாளைக் கொண்டாடிய பிரிட்டிஷ் இளவரசர்

1 mins read
ddc387de-fcd3-4f8c-894e-a2c015bc25a6
(இடமிருந்து) டெய்லர் சுவிஃப்ட், இளவரசி சார்லட், இளவரசர் ஜார்ஜ், இளவரசர் வில்லியம். - படம்: கென்சிங்டன்ராயல்/எக்ஸ்

லண்டன்: புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட் லண்டனில் தமது இசைநிகழ்ச்சியைப் படைத்துவருகிறார்.

தொடக்க நாளான ஜூன் 21ஆம் தேதி வெம்ப்லி அரங்கில் சுவிஃப்ட் படைத்த இசைநிகழ்ச்சியில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் தமது 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பாடகி சுவிஃப்டுடன் தாமும் தமது பிள்ளைகளான இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட்டும் மேடையின் பின்புறம் எடுத்துக்கொண்ட படத்தை இளவரசர் வில்லியம் ஜூன் 22ஆம் தேதி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

“சிறந்த மாலைப் பொழுதுக்கு டெய்லர் சுவிஃப்ட்டுக்கு நன்றி,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பாடகி சுவிஃப்ட்டும் அம்மூவருடனும் தமது காதலரும் அமெரிக்கக் காற்பந்து விளையாட்டாளருமான டிரவிஸ் கெல்சுடனும் எடுத்துக்கொண்ட படத்தைப் பதிவிட்டுள்ளார்.

சுவிஃப்ட்டும் அவரது காதலரும் இணைந்து காணப்படும் படம் சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

பிரிட்டிஷ் அரியணைக்கு அடுத்த வாரிசான இளவரசர் வில்லியம் ‘ஷேக் இட் ஆஃப்’ பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் அதிகம் பரவிவருகிறது.

வெம்ப்லி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 90,000 ரசிகர்கள் திரண்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்