உடலின் கீழ்ப்பகுதியில் உணர்ச்சியை இழந்தார் ஹல்க் ஹோகன்

1 mins read
414f1863-f6e6-43c3-8f87-20ada9be8655
1980களில் 'டபிள்யுடபிள்யுஎஃப்' மல்யுத்தப் போட்டியில் சக்கைபோடு போட்டு ரசிகர்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன். படம்: ஹல்க் ஹோகன்/இன்ஸ்டகிராம் -

1980களில் 'டபிள்யுடபிள்யுஇ' மல்யுத்தப் போட்டியில் சக்கைபோடு போட்டு ரசிகர்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகனுக்கு முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவரது உடலின் கீழ்ப்பகுதியில் உணர்ச்சி இல்லாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

69 வயது ஹோகனின் இயற்பெயர் டெரி ஜீன் பொலியா. தமது கால்களில் உணர்ச்சியில்லாமல் போய்விட்டதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க அவர் ஊன்றுகோல் பயன்படுத்தி நடப்பதாக சக மல்யுத்த வீரர் கர்ட் எங்கல் கூறினார்.

தாம் உணர்ச்சியை இழந்தது குறித்து ஹல்க் ஹோகன் பொதுவெளியில் இன்னும் பேசவில்லை.

1977ல் மல்யுத்த வீரராக வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கிய ஹல்க் ஹோகன், மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

'டபிள்யுடபிள்யுஇ' போட்டிகளிலும் ஓய்வுக்காலத்திலும் முதுகு, இடுப்பு, மூட்டில் ஏற்பட்ட காயங்களுக்காக இவர் பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.