நியூயார்க்: ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் பகுதி நேரமாகப் பாடம் நடத்தும் பேராசிரியர் ஒருவர் மாசசூசெட்ஸ் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கி பயன்படுத்தியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் டிசம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கார்லோஸ் போர்சுகல் கோவா என்னும் அந்தப் பேராசிரியர், பிரேசில் நாட்டுக் குடிமகன். அவருக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்ட விசாவும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கார்லோசின் நடவடிக்கையை ‘யூத எதிர்ப்பு துப்பாக்கிச் சூடுச்சூடு சம்பவம்’ என டிரம்ப் நிர்வாகம் வகைப்படுத்தியுள்ளது.
கார்லோஸ், பிரேசிலின் சாவ் பாலோ சட்ட கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவர் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் செப்டம்பர் மாதம் முதல் பாடம் நடத்துகிறார்.
அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேராசிரியரின் கைது நடவடிக்கை தொடர்பாக ஹார்வர்ட் சட்ட கல்லூரி உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழத்திற்கும் இடையே பூசல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

