ஐடஹோ கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்க கோரிக்கை

1 mins read
d73a4bb4-8893-4bc6-826f-4e4e02731005
2022ஆம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டது முதல் சிறையில் இருக்கும் பிரையன் கோபர்கரின் வழக்கு அக்டோபரில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பிலடெல்பியா: ஐடஹோ பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரத் திட்டமிடுவதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

அம்மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் 2022ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

மிக மோசமான முறையில் அவர்கள் கொலை செய்யப்பட்ட விதம், மரண தண்டனையைக் கோரத் தூண்டியதாக முன்னணி வழக்கறிஞர் பில் தாம்சன் குறிப்பிட்டார்.

சந்தேகப் பேர்வழி பிரையன் கோபர்கர்மீது ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தக் கொலைகள் மிகக் கொடூரமானவை என்றும் கோபர்கர் மனித உயிருக்குச் சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்றும் வழக்கறிஞர் தாம்சன் கூறினார்.

குற்றச்சாட்டில் இருந்து தான் விடுவிக்கப்படுவதை எதிர்பார்ப்பதாக கோபர்கர் தன் வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார்.

மே மாதம் நடந்த விசாரணையின்போது அவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

2022ஆம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கோபர்கரின் வழக்கு அக்டோபரில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்