ஈரானில் கடந்த ஒரு வார காலமாகப் போராட்டம் நடந்து வருகிறது. அதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் வலதுசாரி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதைக் கண்டித்து அந்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் வன்முறையும் நடந்தன.
ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பூசல்களும் ஏற்பட்டன.
போராட்டம் குறித்து ஈரானிய அரசாங்கத்தின் தொலைக்காட்சியில் தகவல் வெளியாகின்றன. ஆனால் அதன் உண்மைத்தன்மையில் நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் மாண்டவர்களின் எண்ணிக்கையும் குறைத்துச் சொல்லப்படுவதாக வலதுசாரி அமைப்புகள் கூறுகின்றன.

