நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உரையாற்றினார்.
அவரது நியூயார்க் வருகையை ஓட்டி, அவரை எதிர்த்து அந்நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி, பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும் என்ற வாசகத்தைக் கொண்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலம் வந்தனர்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் நெட்டன்யாகுவுக்கு எதிராக முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் டைம்ஸ் ஸ்குவேரில் கூடி, அங்கிருந்து ஐநா தலைமையகத்துக்குப் பேரணியாகச் சென்றனர்.
காஸா போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டனர். பலர் பட்டினியால் வாடி வதுங்கும் நிலை உள்ளது. இது இனப்படுகொலைக்குச் சமம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
ஆனால் இதை இஸ்ரேல் மறுத்து வருகிறது.
ஹமாஸ் போராளி அமைப்பிடமிருந்து இஸ்ரேலியர்களைப் பாதுகாக்கவே தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது.