ஊழலை எதிர்த்து பிலிப்பீன்சில் மறுபடியும் ஆர்ப்பாட்டம்

ஊழலை எதிர்த்து பிலிப்பீன்சில் மறுபடியும் ஆர்ப்பாட்டம்

படம்: இபிஏ

30 Nov 2025 - 2:25 pm

1 mins read

மணிலா: பிலிப்பீன்சில் ஊழலை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரோமன் கத்தோலிக்க சமய குரு குழுக்கள் (clergy), சிவில் சமூகக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்தோரும் தலைநகர் மணிலாவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்.

மணிலாவில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) கிட்டத்தட்ட 3,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதாக அந்நகரக் காவல்துறை கணித்துள்ளது.

ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்படும் அதிகாரிகளைக் கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் முழக்கமிட்டனர். அதேபோல், ரோமன் கத்தோலிக்க தேவாலய அதிகாரிகள் பலர், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சி வெடித்த பகுதியில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிலிப்பீன்சில் பெரும்பான்மை மக்கள் ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பில்லியன் கணக்கான பெசோ தொகையை அரசாங்க அதிகாரிகளும் அப்பணிகளை மேற்கொள்வோரும் ஒன்றுபட்டு சூரையாடியதாகக் கூறப்படுகிறது. அது, நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம், பிலிப்பீன்சின் பொருளியல் வளர்ச்சியை மந்தமடையச் செய்துள்ளது. அதோடு, முதலீட்டாளர்களிடையே அந்நாட்டைப் பற்றிய கருத்து கசப்படைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்