தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெல்பர்னில் ஆர்ப்பாட்டம்; பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

1 mins read
2b7d7145-bb2b-498e-bc29-340ecdffc1da
மெல்பர்னில் ஆர்ப்பாட்டக்காரர்களும் காவல்துறையினரும் மோதினர். - படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இரண்டாவது நாளாகப் போர் எதிர்ப்பு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

செப்டம்பர் 12ஆம் தேதியன்று மெல்பர்னில் நடைபெற்ற தற்காப்புக் கண்காட்சிக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.

செப்டம்பர் 11ஆம் தேதியன்று நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அதில் காவல்துறை அதிகாரிகள் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தற்காப்புக் கண்காட்சி நடைபெறும் இடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நெருங்க முடியாதபடி புதிய தடுப்புகள் போடப்பட்டன.

கலவரத் தடுப்பு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் பணிகளுக்காக விக்டோரியா மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் மெல்பர்னுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், புட்டிகள், குதிரைச் சாணம் போன்றவற்றை எறிந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் மிருதுவான கையெறி குண்டுகளையும் வெட்டொளிச் சாதனங்களையும் உடலில் எரிச்சலை ஏற்படுத்தும் திரவத்தையும் பயன்படுத்தினர்.

செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 1,500 ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

மொத்தம் 22 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்