புரூடென்ஷியல் காப்புறுதி நிறுவனம்: புதிய முதலீடுகள் 12 விழுக்காடு லாபம் ஈட்டின

புரூடென்ஷியல் காப்புறுதி நிறுவனம்: புதிய முதலீடுகள் 12 விழுக்காடு லாபம் ஈட்டின

1 mins read
சீனாவில் செய்யப்பட்டுள்ள புதிய முதலீடுகளால் லாபம் 27 விழுக்காடு ஏற்றம்
9907ec59-9017-498d-8808-b512ad34e7b0
நியூட்டன் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள புரூடென்ஷியல் நிறுவன விளம்பரப் பதாகை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பெங்களூரு: லண்டனிலும் ஹாங்காங்கிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான புரூடென்ஷியல் காப்புறுதி நிறுவனம், அதன் புதிய முதலீடுகளில் 12 விழுக்காடு லாபம் ஈட்டியுள்ளதாக புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்துள்ளது.

அதன்பயனால் அதன் பங்குதாரர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டுக்குள்ளாக $8.9 பில்லியனை பகிரப்போவதையும் புரூடென்ஷியல் தெரிவித்துள்ளது.

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதன் வர்த்தகங்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த அளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி அனில் வத்வானி தெரிவித்தார்.

இரட்டை இலக்கு வளர்ச்சிப் பாதையை நோக்கி நிறுவனம் செல்வதால், ஒரு பங்குக்கு 18.89 காசு என்ற அளவில் இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையையும் அறிவித்தது. இது 2025-இல் அறிவிக்கப்பட்ட 16.29 காசைவிட அதிகமாகும்.

ஹாங்காங்கில் உள்ள அதன் வர்த்தகங்களும் 12 விழுக்காடு லாபத்தை பதிவுசெய்துள்ளன. உள்நாட்டுடன் சீனாவின் வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைந்து அந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றனர்.

சீனாவில் செய்யப்பட்டுள்ள புதிய காப்புறுதி முதலீடுகளாலும் கூட்டு நிறுவனச் செயல்பாடுகளாலும் அதன் லாபம் 27 விழுக்காடு ஏற்றம் கண்டது.

“2025ஆம் ஆண்டில் நாங்கள் எட்டியுள்ள வேகத்தை 2026ஆம் ஆண்டுக்கும் எடுத்துச்செல்கிறோம். முக்கிய துறைகளில் எங்கள் வளர்ச்சி தொடரும் என்பது எங்களது நம்பிக்கை,” என்றார் திரு அனில்.

குறிப்புச் சொற்கள்
காப்புறுதிவர்த்தகம்லாபம்நிதிமுதலீடு