தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புட்டினுடன் சிரிய அதிபர் சந்திப்பு

1 mins read
84328673-afad-484c-815e-8cf7363d37bb
மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் (வலது) சந்தித்தார் சிரிய அதிபர் பஷார் அல் அசாத். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: சிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார்.

ரஷ்ய அதிபர் மாளிகையில் புதன்கிழமை (ஜூலை 24) இச்சந்திப்பு இடம்பெற்றதாக அதிபரின் செய்திப் பிரிவு தெரிவித்தது.

“இவ்வட்டாரத்தின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து தங்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளேன். துரதிர்ஷ்டவசமாக, இவ்வட்டாரத்தில் மோதல் போக்கு அதிகரித்து வருவதைக் காண்கிறோம். சிரியாவிற்கும் இது பொருந்தும்,” என்று அதிபர் புட்டின், திரு அசாத்திடம் கூறினார்.

அதற்கு, “உலகத்திலும் யுரேசிய வட்டாரத்திலும் இடம்பெறும் இப்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அவை தொடர்பில் ஆலோசிப்பதற்கான நமது இச்சந்திப்பு மிக முக்கியமானதாகத் தெரிகிறது,” என்று திரு அசாத், அதிபர் புட்டினிடம் தெரிவித்ததாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்