உக்ரேன் போரில் களமிறங்கும் புதிய வீரர்களுக்கு புட்டின் கடன் விலக்கு

உக்ரேன் போரில் களமிறங்கும் புதிய வீரர்களுக்கு புட்டின் கடன் விலக்கு

1 mins read
735f3804-18c5-4c82-bba9-89fa7c1b6c02
உக்ரேன் தலைநகர் கியவ்வில் ர‌ஷ்யத் தாக்குதலுக்கு உள்ளான கடைத்தொகுதிவழி நடந்துசெல்லும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ: உக்ரேன் போரில் புதிதாகக் களமிறங்கும் ராணுவ வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கடன் விலக்கு அளிக்கும் உத்தரவில் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கையெழுத்திட்டுள்ளதாக கிளம்ளின் திங்கட்கிழமை (மே 25) தெரிவித்தது.

நான்காண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரேன் போரில் தங்கள் ராணுவத்தை மேம்படுத்த மாஸ்கோ ஏற்கெனவே பல ஆதரவு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் இந்நடவடிக்கை அங்கம் வகிக்கிறது.

மே மாதம் 1ஆம் தேதி முதல் ர‌ஷ்ய தற்காப்பு அமைச்சுடன் ஒப்பந்தம் செய்துகொண்டோர், அவர்களின் துணை அல்லது இருவருக்கும் 10 மில்லியன் ரூபல் (178,700 வெள்ளி) வரையிலான தொகைக்கு கடன் விலக்கு அளிக்கப்படும். கடனை மீட்க அந்தத் தேதிக்கு முன்பே சட்டரீதியாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் கடன் விலக்கைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கிரம்ளினில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ர‌ஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்தது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று ர‌ஷ்யா கூறும் அந்தப் போரில் சண்டையிட விரும்புவோர் குறைந்தது ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என்று கிரம்ளின் குறிப்பிட்டது.

அமெரிக்கத் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நின்றுபோயிருக்கும் நிலையில் தங்கள் படைகளை மேம்படுத்தும் முயற்சியில் ர‌ஷ்யா இறங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்