தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருபாலினர் சுதந்திரத்திற்கு எதிராகப் புதிய சட்டம்

1 mins read
fecb1031-2b9c-427b-8c63-3155d733df56
ரஷ்யாவில் பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினரின் சுதந்திரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் கடும் நடவடிக்கைகளில் ஆக அண்மையானது இந்தப் புதிய சட்டம். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யாவில் இப்போது பாலின மாற்று சிகிச்சைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அதிபர் விளாடிமிர் புட்டின் கையெழுத்திட்ட புதிய கடுமையான சட்டத்தின்கீழ், பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினருக்கு மற்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சைக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கான சிகிச்சைக்கும் தடை செய்யப்பட்டுள்ளதைத் தவிர, கடப்பிதழ்கள் போன்ற அதிகாரபூர்வ ஆவணங்களில் பாலினத்தை மாற்றுவதற்கும் சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு, புதிய சட்டத்தின்கீழ் ஒருவர் பாலினத்தை மாற்றினால் அவருடைய திருமணம் ஏற்றுக்கொள்ளப்படாது. அத்தகைய தம்பதியர் தத்தெடுப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினரின் சுதந்திரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் கடும் நடவடிக்கைகளில் ஆக அண்மையானது, இந்தப் புதிய சட்டம்.

புதிய சட்டத்தை ஆதரிக்கும் ரஷ்ய அதிகாரிகள், அந்நாடு பாரம்பரிய விழுமியங்களைக் கடைப்பிடிப்பதற்கு உறுதிசெய்யும் ஒரு நடவடிக்கை அது என்று கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்