தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்ணை விழுங்கியது மலைப்பாம்பு

1 mins read
75e363f8-b0dc-4e89-a1c8-d601ca82c625
இத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிது என்றாலும், அண்மைய ஆண்டுகளில் இந்தோனீசியாவில் மலைப்பாம்புகள் விழுங்கியதில் சிலர் உயிரிழந்தனர். - கோப்புப் படம்: செரினா லின்

மகஸ்ஸார்: மத்திய இந்தோனீசியாவில் மலைப்பாம்பு ஒன்று பெண் ஒருவரை விழுங்கியதைத் தொடர்ந்து, அதன் வயிற்றுக்குள் அவர் மாண்டு கிடந்தார்.

ஏறக்குறைய 5 மீட்டர் நீளமுடைய அந்த மலைப்பாம்பிற்குள் ஜூன் 7ஆம் தேதி 45 வயது ஃபரிதா கண்டெடுக்கப்பட்டார்.

நான்கு பிள்ளைகளுக்குத் தாயாரான அவர், ஜூன் 6ஆம் தேதி இரவு காணாமல்போனார். அவர் வீடு திரும்பாததால், அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

ஃபரிதாவின் உடைமைகளைக் கண்டறிந்த அவரது கணவருக்குச் சந்தேகம் எழுந்தது. கிராம மக்கள் அக்கம்பக்கத்தில் ஃபரிதாவைத் தேடியதைத் தொடர்ந்து, பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டது.

“மலைப்பாம்பின் வயிற்றைக் கிழக்க அவர்கள் இணங்கினர். அவ்வாறு செய்தவுடன், உடனடியாக ஃபரிதாவின் தலை தெரிந்தது,” என்று கிராமத் தலைவர் சுவார்டி ரோசி தெரிவித்தார்.

அந்தப் பாம்பிற்குள் முழுமையாக ஆடை அணிந்திருந்த நிலையில் ஃபரிதா கண்டெடுக்கப்பட்டார்.

இத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிது என்றாலும், அண்மைய ஆண்டுகளில் இந்தோனீசியாவில் மலைப்பாம்புகள் விழுங்கியதில் சிலர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்