தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குவான்டாஸ் செய்த பிழை; பயணிகள் சிலருக்கு அதிர்ஷ்டம்

1 mins read
c1242b9c-231b-4791-bea6-14ee08a787b0
குவான்டாஸ் விமானச் சேவையின் ஆக உயரிய பிரிவு பயணச்சீட்டுகள் தவறுதலாக ஏறத்தாழ 85 விழுக்காட்டுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் நிறுவனம் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான விமானச் சேவையின் ஆக உயரிய பிரிவு பயணச்சீட்டுகளைத் தவறுதலாக $5,000 ஆஸ்திரேலிய டாலருக்கு (S$4,411) விற்பனை செய்தது.

இது வழக்கமான விலையைவிட ஏறத்தாழ 85 விழுக்காடு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பயணிகள் சிலர் ஆக உயரிய பிரிவில் 300 பயணச்சீட்டுகளை வாங்கியதாக ஆகஸ்ட் 26ஆம் தேதி குவான்டாஸ் கூறியது.

இந்த அதிர்ஷடசாலிகளுக்கு குவான்டாஸ் ஆக உயரிய பிரிவுப் பயணச்சீட்டுகளை விற்கிறது. ஆனால் விலை சற்று மாற்றியமைக்கப்படுகிறது. இருப்பினும், வழக்கமான விலையைவிட ஏறத்தாழ 65 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சிட்னிக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான இருவழிப் பயணத்துக்கான குவான்டாசின் ஆக உயரிய பயணச்சீட்டின் வழக்கமான விலை 20,000 ஆஸ்திரேலிய டாலருக்கும் 29,000 ஆஸ்திரேலிய டாலருக்கும் இடைப்பட்டது.

தவறான கட்டண விலையைத் தவறாக விளம்பரம் செய்துவிட்டால் அதனைச் சரிசெய்துவிட்டு வழக்கமான, சரியான விலையில் பயணச்சீட்டுகளை விற்கும் உரிமை விமானச் சேவைகளுக்கு உண்டு.

இந்நிலையில், நிரலாக்கத் தவற்றால் இக்குளறுபடி ஏற்பட்டதாக குவான்டாஸ் கூறுகிறது.

இருப்பினும், விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பயணச்சீட்டுகளை வாங்கியோருக்கு ஏமாற்றமளிக்க அது விரும்பவில்லை. இதனால் ஏற்படும் செலவை ஏற்பதாக அது கூறியது.

குறிப்புச் சொற்கள்