காணாமல் போன ஆபத்தான கதிரியக்கப் பொருள் தாய்லாந்து ஆலையில் கிடைத்தது

காணாமல் போன ஆபத்தான கதிரியக்கப் பொருள் தாய்லாந்து ஆலையில் கிடைத்தது

1 mins read
45b4b2cb-244f-41b4-83dc-1d42b7be6beb
படம்: THE NATION/ASIA NEWS NETWORK -

தாய்லாந்தின் ஒரு மின்னாலையில் காணாமல் போன ஆபத்து வகை கதிரியக்க தனிமமான சீஸியம் 137 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கதிரியக்கத் தனிமம் ஓர் எஃகு உருக்கும் ஆலையில் இருந்தது.

தலைநகர் பேங்காக்கில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலைகளில் அத்தனிமம் தேடப்பட்டு வந்தது.

கபின் பூரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஆலையில் இருந்து கதிர்வீச்சு வெளியானதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின்னர் அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

தனிமம் உருக்கப்படுவது உறுதியான பிறகு அதிகாரிகள் அந்த நடவடிக்கையை நிறுத்தி, அதனைப் பாதுகாப்பாக மீட்டு பத்திரப்படுத்தினர்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கதிர்வீச்சு சுற்றுச்சூழலில் கலந்துள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

சீஸியத்தை தொட்டால் தோல், ஈரல், எலும்புகள் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.