2.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டை ரஃபிசி ரம்லி மறுப்பு

2.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டை ரஃபிசி ரம்லி மறுப்பு

படம்: பெர்னாமா

20 Feb 2026 - 6:17 pm

1 mins read

கோலாலம்பூர்: முன்னாள் பொருளியல் அமைச்சரும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிசி ரம்லி, சுமத்தப்பட்ட 2.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார்.

தன்னுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதாக வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் என அவர் விளக்கம் அளித்தார்.

இந்தக் குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு எனவும், குறிப்பாக ‘கேப்ரிஸ்’ என அறியப்படும் செல்வாக்காளர் அரிஸ் ரம்லி இதை பரப்பியதாகவும் ரஃபிசி தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டது, தேசிய ஆற்றல் மாற்றுத் திட்டம் தொடர்பாக ‘யுஇஎம் லெஸ்ட்ரா’ (UEM Lestra) நிறுவனம் மேற்கொள்ளும் 2.5 பில்லியன் ரிங்கிட் முதலீட்டைச் சுற்றிய விவகாரம் எனக் கூறப்படுகிறது.

“எனது பெயரைச் சுட்டிக்காட்டி, எனக்குத் தொடர்புள்ள நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது. இது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மற்றொரு அவதூறு பிரசாரம் மட்டுமே,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த வகையிலான ஊழல் அல்லது தவறான ஒப்பந்த வழங்கலிலும் தமக்கு தொடர்பில்லை என்றும், உண்மையற்ற குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன என்றும் ரஃபிசி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஊழல்மலேசியாஒப்பந்தம்