பெட்டாலிங் ஜெயா: விலை குறைக்கப்பட்ட ‘மைடூரிஸ்ட்’ பயண அட்டையை மலேசியப் போக்குவரத்து அமைப்பான ‘ரெபிட் கேஎல்’ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் பயண அட்டையைப் பயன்படுத்தி மலேசியர்களும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் எவ்வளவு வேண்டுமானாலும் ரெபிட் கேஎல் அமைப்புக்குச் சொந்தமான போக்குவரத்துக் கட்டமைப்பில் பயணம் செய்யலாம், கட்டணத் தள்ளுபடிகளையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண அட்டையின் விலை 15 ரிங்கிட்டிலிருந்து (S$4.60) தொடங்குகிறது.
ஆகஸ்ட் 31ஆம் தேதி மலேசியா அதன் தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது.
தேசிய தினத்தை முன்னிட்டு இந்தச் சிறப்புச் சலுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரெபிட் கேஎல் நிறுவனம் அதன் கட்டணங்களைத் தற்போது திருத்தியுள்ளது.
15 ரிங்கிட் பெறுமானமுள்ள ‘ஒருநாள் பயண அட்டை’யை மலேசியர்கள் வாங்கலாம். இதற்கு முன்பு அது 20 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டது.
இரண்டு நாள்கள் பயண அட்டை 20 ரிங்கிட்டுக்கும் மூன்று நாள்கள் பயண அட்டை 25 ரிங்கிட்டுக்கும் விற்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் ஒருநாளுக்குப் பயன்படுத்தக்கூடிய பயண அட்டையை 35 ரிங்கிட்டுக்கும் இரண்டு நாள்கள் பயண அட்டையை 50 ரிங்கிட்டுக்கும் மூன்று நாள்கள் பயண அட்டையை 65 ரிங்கிட்டுக்கும் வாங்கலாம்.