ஜோகூரில் அழிவின் விளிம்பில் அரிய வகைக் குரங்குகள்

ஜோகூரில் அழிவின் விளிம்பில் அரிய வகைக் குரங்குகள்

1 mins read
ஜோகூரையும் கடந்து மற்ற மாநிலங்களில் அக்குரங்குகள் வாழ வாய்ப்புள்ளது
7eafaace-a974-47af-8e8d-07b875d70c81
‘ராஃபிள்ஸ் லங்குர்’ வகைக் குரங்குகள் சிங்கப்பூரிலும் காணப்படுகின்றன. - படம்: சப்ரினா ஜபார், குரங்கு மீட்புக் குழு

ஜோகூர்பாரு: உலகில் குறைந்த எண்ணிக்கையில் வாழும் அரிய வகை ‘ராபிள்ஸ் லங்குர்’ வகை குரங்குகள், ஜோகூரில் காணப்பட்டது விலங்கியல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைத் தூண்டியுள்ளது.

இவ்வாண்டு மே மாதம் துன் ஹுசேன் ஓன் மலேயா பல்கலைக்கழகமும் (யுடிஹெச்எம்) ஜோகூர் வனத்துறையும் இணைந்து லெங்கோர்-மெர்சிங் பகுதியில் கள ஆய்வுகளை நடத்தின.

ஆய்வின்போது, இதற்குமுன் அறியப்படாத வகையில் 40 முதல் 50 லங்குர் இனக் குரங்குகள் வனப்பகுதியில் காணப்பட்டன என்று பல்கலைக்கழகத்தின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தலைவரான முகம்மது அப்துல் லத்தீஃப் அபு பாக்கார் தெரிவித்தார்.

இங்குள்ள வனப்பகுதியின் பரப்பளவை கருத்தில்கொண்டால், புதிய குரங்குக் கூட்டம் மலேசியாவில் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே, முழு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதும் ஜோகூரில் மட்டும் 600 முதல் 700 குரங்குகள் வாழலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரிலும் லங்குர் குரங்குகள் உள்ளன

அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் 2022ஆம் ஆண்டில் மிக அரிய வகை குரங்கினமாக லங்குர் வகை அடையாளம் காணப்பட்டது. அக்குரங்குகள், மலேசியாவில் 300, சிங்கப்பூரில் 68 என்ற எண்ணிக்கையில் வாழ்வதாக அக்காலக்கட்டத்தில் கணக்கிடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் ஜோகூரில் கணிக்கப்பட்ட எண்ணிக்கை, அந்த மாநிலத்தையும் கடந்து மற்ற மாநிலங்களில் அக்குரங்குகள் வாழும் சாத்தியத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்