கேன்பரா: ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் முதல் பெண் ஆளுநராக திருவாட்டி மிஷெல் புல்லக் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி பதவி ஏற்கிறார்.
1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த வங்கியில் பெண் ஒருவர் தலைமைப் பதவி ஏற்பது இதுவே முதல்முறை.
தற்போது ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் (ஆர்பிஏ) ஆளுநராக இருப்பவர் பிலிப் லோவ். அவருடைய ஏழு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தபின் திருவாட்டி மிஷெல் புல்லக் அந்தப் பொறுப்பை ஏற்பார். தற்போது அவர் ஆர்பிஏயின் துணை ஆளுநராக உள்ளார்.
நாடு பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்கப் போராடிவரும் சூழலில் புல்லக்கின் நியமனம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“திருவாட்டி புல்லக் தலைசிறந்த பொருளியலாளர், மத்திய வங்கியில் நீண்டகாலம் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்,” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

