வரலாறு காணாத அளவில் மக்கள் நியூசிலாந்திலிருந்து வெளியேற்றம்

1 mins read
11c72b7e-ea2e-497e-827d-8eeec47ae357
மாலை வேளையில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வெல்லிங்டன்: இவ்வாண்டு மார்ச் மாதத்தை உள்ளடக்கிய ஓராண்டு காலத்தில் வரலாறு காணாத அளவில் கிட்டத்தட்ட 123,256 பேர் நியூசிலாந்திலிருந்து வெளியேறினர்.

அவர்களில் 70,000 நியூசிலாந்து குடிமக்களும் அடங்குவர். ஸ்டட்டிஸ்டிக்ஸ் நியூசிலாந்து (Statistics New Zealand) அமைப்பு புதன்கிழமை (மே 14) இத்தகவல்களை வெளியிட்டது.

இதனால் ஈராண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் நியூசிலாந்து, குடிநுழைவு மூலம் அடைந்த பலனைக் காட்டும் விகிதம் ஆகக் குறைவாகப் பதிவானது.

149,607 வெளிநாட்டவர் நியூசிலாந்தில் குடிபுகுந்தனர். அதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த கணக்கெடுப்பின்படி நியுசிலாந்தில் குடிபுகுந்திருப்போரின் எண்ணிக்கை 26,351க்கு அதிகரித்தது. இந்த எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டிறுதியில் ஆக அதிகமாக 135,000ஆகப் பதிவானது, அதிலிருந்து தொடர்ந்து குறைந்துவந்துள்ளது.

பொருளியல் மந்தமடைந்துள்ளதால் வேலைக்கு எடுப்பது, சம்பள உயர்வு ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணம்.

நல்ல சம்பளம் பெறும் நோக்கில் நியூசிலாந்து குடிமக்கள் பலர் மற்ற நாடுகளில் வாழ முடிவெடுத்துவருகின்றனர். குறிப்பாகப் பலர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபோகின்றனர்.

அதேவேளை, நியூசிலாந்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அந்நாட்டுக்கு வெளிநாட்டவர் பலர் குடிபோகத் தயங்குகின்றனர்.

குறிப்புச் சொற்கள்