தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெற்கு ஜப்பானில் என்றும் இல்லாத மழை

1 mins read
fd389184-c0c4-4264-8d52-6d8804d26145
ககோ‌ஷிமா வட்டாரத்தில் கனமழை. - படம்: என்எச்கே / இணையம்

தோக்கியோ: ஜப்பானின் தெற்குப் பகுதிகள் சிலவற்றில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத வெப்பம் உணரப்பட்டதையடுத்து இப்போது அதிக மழை பெய்துள்ளது. அந்நாட்டில் இவ்வாரம் தேசிய அளவில் 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

ககோ‌ஷிமா வட்டாரத்தில் ஆற்றிலிருந்து கரைபுரண்ட நீர் வீடுகளுக்குள் புகுந்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளிகளில் தெரிந்தது.

ககோ‌ஷிமா வட்டாரத்தில் உள்ள கிரி‌ஷிமா நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணி வரையிலான 24 மணிநேரத்தில் வரலாறு காணாத அளவில் 500 மில்லிமீட்டர் உயரத்துக்கு மழை சேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. அது, ஆகஸ்ட் மாதம் சராசரியாகப் பதிவாகும் மழையின் அளவில் இரு மடங்காகும்.

எனினும், மழை பொழிவு குறைய ஆரம்பித்தபோது ஜப்பானிய வானிலை அமைப்பு மழை எச்சரிக்கையைக் குறைத்தது. அதற்கு முன்பு ஆக உயரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருந்தாலும், மக்களை விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு வானிலை அமைப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர் கூட்டத்தில் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்