ஆங் சான் சூச்சியைச் சந்தித்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி

ஆங் சான் சூச்சியைச் சந்தித்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி

2 mins read
2944a54c-18cd-45ff-8d69-0df301f1eec1
மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி (இடது) அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியைச் சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: மியன்மாரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) சந்தித்துப் பேசியிருப்பதாக மியன்மார் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

81 வயதுான திருவாட்டி சூச்சியின் ஆரோக்கியமும் நல்வாழ்வும் குறித்து குறித்துப் பல ஆண்டுகளாகக் கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நொபெல் பரிசு பெற்ற துருவாட்டி சூச்சி, பிப்ரவரி 2021ஆம் ஆண்டிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மியன்மார் ராணுவம், திருவாட்டி சூச்சியின் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியது.

அதையடுத்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட திருவாட்டி சூச்சியின் இருப்பிடம், அவரது உடல்நிலை அவரது உடல்நிலை பற்றிய விவரங்களைப் பெறுவது சிரமமாக இருந்தது.

மேலும், எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரையோ தூதரையோ பொதுவிடத்தில் சந்திக்க முடியாத நிலையில் திருவாட்டி சூச்சி இருந்தார்.

இந்நிலையில், தலைநகர் நேப்பிடாவில் மியன்மாருக்கான அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூத்த பிரதிநிதியான அர்னாட் டி பேக் திருவாட்டி சூச்சியைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பு குறித்து செஞ்சிலுவைச் சங்கம் உடனடியாகக் கருத்துக் கூறவில்லை. அந்தச் சந்திப்பின் நோக்கம் பற்றியும் அது வெளியிடவில்லை.

அரசாங்கப் பேச்சாளர் வழங்கிய நான்கு புகைப்படங்களில் இரண்டில், மியன்மாரின் பாரம்பரிய உடையில் காணப்பட்ட திருவாட்டி சூச்சி, இரண்டு நாற்காலிகளும் ஒரு மேசையும் மட்டும் உள்ள ஓர் அறையில் அர்னாட் டி பேக்கைச் சந்திப்பதைக் காண முடிகிறது.

மற்றொரு புகைப்படத்தில் ஒரு பிறந்தநாள் கேக்கில் திருவாட்டி சூச்சிக்கு வாழ்த்துகளுடன் 29.6.2026 என்ற தேதியையும் காண முடிந்தது.

பிறந்தநாள் கேக்கில் திருவாட்டி சூச்சிக்கு வாழ்த்துகளுடன் 29.6.2026 என்ற தேதியைக் காட்டும் புகைப்படம் வெளியிடப்பட்டது.
பிறந்தநாள் கேக்கில் திருவாட்டி சூச்சிக்கு வாழ்த்துகளுடன் 29.6.2026 என்ற தேதியைக் காட்டும் புகைப்படம் வெளியிடப்பட்டது. - படம்: இபிஏ

அந்தப் புகைப்படங்கள் எங்கு, எப்போது எடுக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
ஆங் சான் சூச்சிசெஞ்சிலுவைச் சங்கம்சந்திப்பு