உத்திபூர்வ ஒத்துழைப்பு மூலம் மலேசியா - இந்தியா இடையிலான உறவுகள் வலுப்பெறும்

உத்திபூர்வ ஒத்துழைப்பு மூலம் மலேசியா - இந்தியா இடையிலான உறவுகள் வலுப்பெறும்

2 mins read
09a12b6e-023f-4de5-b18b-6c27295c01f5
மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: வர்த்தகம், உயர் தொழில்நுட்பம், சுற்றுலா, இணையப் பாதுகாப்பு, வட்டார பாதுகாப்பு நிலைத்தன்மை உள்ளிட்ட துறைகளில் அதிகரித்த உத்திபூர்வ ஒத்துழைப்பு மூலம் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுகின்றன.

அண்மையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வருகை, 2024ஆம் ஆண்டு விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் என்ற நிலைக்கு மேம்படுத்தப்பட்ட உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளின் உறுதிப்பாட்டின் வெளிப்பாடு என்று வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் தெரிவித்தார்.

“இந்தியாவுடனான வர்த்தகம் மலேசியாவிற்கு பயனாக இருக்கும். ஏனென்றால், மலேசியா இந்தியாவிடமிருந்து பொருள்களை வாங்குவதைவிட இந்தியா மலேசியாவிடமிருந்து பல பொருள்களை இறக்குமதி செய்கிறது. மேலும், நாம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் பெரும்பாலானவை செம்பனை எண்ணெய், மின் மற்றும் மின்னணு பொருள்கள், உபரிப்பாகம் வடிவங்களில் உள்ளன. இந்தியாவில் இருந்து உபரிப்பாகம் மற்றும் தொழில்துறை பொருள்களையும் நாம் இறக்குமதி செய்கிறோம்,” என்றார் அவர்.

இந்தியப் பிரதமரின் வருகையைத் தொடர்ந்து, வட்டார வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு, அமெரிக்காவின் வரி அமலாக்கம், மியன்மாரில் ஜனநாயகம், அமைதியை மீட்டெடுப்பதில் மலேசியா மற்றும் இந்தியாவின் கூட்டு நடவடிக்கைகள் குறித்து பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.

இந்தியாவைப் போலவே மலேசியாவும் தற்காப்புச் சொத்துகளைக் கொண்டுள்ளது என்றும் சுகோய் போர் விமானங்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மறுசீரமைப்பு அம்சங்களில் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்படுவதாகவும் முகமது ஹசான் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்