தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவ மாணவர்கள் பள்ளி திரும்புவதில் நிம்மதி: தென்கொரியப் பிரதமர்

2 mins read
6f34e78d-6ab9-4efd-9d1c-f0ecbb52424b
மருத்துவக் கல்வி, பயிற்சி ஆகியவற்றின் நீண்டகால சீர்திருத்தங்கள் குறித்து ஆராய பணிக்குழு ஒன்றை அமைக்கும்படி மருத்துவ மாணவர்களை ஆதரிக்கும் குழுக்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன. - படம்: இபிஏ

சோல்: தென்கொரியப் பிரதமர் கிம் மின் சியோக், நாட்டின் மருத்துவ மாணவர்கள் ஓராண்டுக்கும் மேல் நீடித்த போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குத் திரும்ப எடுத்திருக்கும் முடிவு ஒரு பெரிய முன்னேற்றம் என்றும் நிம்மதியளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மருத்துவப் பள்ளியில் கூடுதலான மாணவர்களைச் சேர்ப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பள்ளியிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அரசாங்கத்தின் அந்தத் திட்டம் மருத்துவக் கல்வியின் தரத்தைக் குறைத்துவிடும் என்று பயிற்சி மருத்துவர்கள் வாதாடினர். அவரச சேவை, குழுந்தை மருத்துவம், ஆகிய முக்கிய பிரிவுகளில் மருத்துவர்களை ஈர்க்க கூடுதலான சீர்திருத்தங்கள் தேவை என்று அவர்கள் கூறினர்.

ஜூலை 12ஆம் தேதி பள்ளிக்குத் திரும்புவதாக அறிவித்த, கற்றல்முறையை வழக்கநிலைக்குக் கொண்டு வரும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கின் உத்தரவின்படி மாணவர்களின் விவகாரம் தொடர்பில் தீர்வுகாண முயற்சிகள் எடுக்கப்படும் என்று திரு கிம் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

“மக்களுக்கு என்ன வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்,” என்றார் அவர்.

மருத்துவர்களுக்குக் குரல் கொடுத்து வரும் முக்கிய குழுவான கொரிய மருத்துவச் சங்கம், கல்விமுறையைச் சீர்படுத்தவும் பயிற்சி நிலையை மேம்படுத்தவும் இதற்குமுன் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தது.

எனினும், மாணவர்கள் சரியாக எந்தத் தேதியில் பள்ளிக்குத் திரும்புவர் என்று சங்கம் குறிப்பிடவில்லை.

“அரசாங்கத்தின்மீதும் நாடாளுமன்றத்தின்மீதும் நம்பிக்கை வைத்து கல்விமுறையையும் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பையும் வழக்கநிலைக்குக் கொண்டுவர உதவி புரிய உறுதியளிக்கிறோம்,” என்று சங்கம் அறிக்கையில் சொன்னது.

நாடாளுமன்றக் கல்விக் குழுவும் மருத்துவ மாணவர்களைப் பிரதிநிதிக்கும் இதர ஆதரவுக் குழுக்களும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டன.

மருத்துவக் கல்வி, பயிற்சி ஆகியவற்றின் நீண்டகால சீர்திருத்தங்கள் குறித்து ஆராய பணிக்குழு ஒன்றை அமைக்கவும் அமைப்புகள் அதிபருக்கும் அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுத்தன.

குறிப்புச் சொற்கள்