தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியக் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் புகழ்பெற்ற கல்வி நிலையங்கள்

1 mins read
வருங்காலத் தலைவர்களை உருவாக்க உதவும் விடுதியுடன் கூடிய பள்ளிகள்
45ec9516-0fed-475a-926b-bbe09674fb4b
மத்திய ஜாவாவின் மேகலாங்கில் அமைந்துள்ள எஸ்எம்ஏ தருணா நுசாந்தாரா பள்ளி மாணவர்கள். இந்தோனீசியாவின் தொழில்முறை வல்லுநர்கள் பலர் இப்பள்ளியில் பயின்றவர்கள். - படம்: எஸ்எம்ஏ தருணா நுசாந்தாரா/இன்ஸ்டகிராம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் நிர்வாகம் கிராமப்புறங்களில் உயர்தரக் கல்வி வழங்கும், விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகளை அமைக்கவிருக்கிறது.

புகழ்பெற்ற எஸ்எம்ஏ தருணா நுசாந்தாரா பள்ளியைப் போன்ற 20 பள்ளிகள் கட்டப்படுவது குறித்த அறிவிப்பை அது விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் நான்கு பள்ளிகள் அடுத்த ஆண்டு (2025) கட்டப்படும்.

அரசாங்க ஆதரவு பெற்ற இந்த உயர்கல்வி நிலையத்தில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பயில்கின்றனர்.

இந்தப் பள்ளிகளில் படிப்பை முடித்த மாணவர்கள் நாட்டின் ராணுவக் கல்விக் கழகத்திலோ முன்னிலைப் பல்கலைக்கழகங்களிலோ எளிதில் சேர்கின்றனர்.

தருணா பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மூவர் புதிய அதிபரின் அமைச்சரவையில் அமைச்சர்களாகவும் ஒருவர் துணை அமைச்சராகவும் இடம்பெற்றுள்ளனர்.

கிராமப்புறங்களைச் சார்ந்த அறிவிற் சிறந்த மாணவர்களைப் பேணுவது புதிய அதிபரின் திட்டங்களில் அடங்கும்.

கிராமப்புறங்களில் தருணா பள்ளியைப் போன்ற 20 பள்ளிகளைக் கட்டும் அதிபரின் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு கிழக்குக் கலிமந்தானின் நுசாந்தாரா, கிழக்கு நுசா தெங்காரா, வடக்கு மலுக்கு, வடக்கு சுலாவேசி ஆகியவற்றில் புதிய பள்ளிகள் கட்டப்படும் என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்