மஸ்கின் கனடிய குடியுரிமையை நீக்கக் கோரிக்கை

மஸ்கின் கனடிய குடியுரிமையை நீக்கக் கோரிக்கை

1 mins read
bca1142a-e58a-440b-bc11-12788766ce90
தென்னாப்பிரிக்காவில் பணக்கார குடும்பத்தில் பிறந்த மஸ்க், அவரது தாயார் மூலம் கனடிய குடியுரிமை பெற்றார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஒட்டாவா: உலகின் ஆகப் பெரும் செல்வந்தரான இலோன் மஸ்கின் கனடிய குடியுரிமையை நீக்க வேண்டும் என்று 250,000க்கும் அதிகமானோர் ஒரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தருவதாக மஸ்க் மீது குறைகூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மஸ்கின் கனடிய குடியுரிமைமீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

கனடிய நலன்களுக்கு எதிரான மஸ்க் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி பிப்ரவரி 20ஆம் தேதி மனு கோரிக்கை தொடங்கப்பட்டது.

மஸ்க் அமெரிக்கக் குடியுரிமையும் வைத்துள்ளார். கனடாவின் இறையாண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலையிடுகிறார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தார். டிரம்ப்பின் நிர்வாகத்தில் மஸ்க் முக்கிய அங்கம் வசிக்கிறார் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மஸ்க் தமக்கு எதிரான மனு குறித்து எக்ஸ் தளத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி கருத்து தெரிவித்துள்ளார். “கனடா உண்மையான நாடு இல்லை” என்று பதிவிட்டார். பின்னை அதை நீக்கிவிட்டார்.

தென்னாப்பிரிக்காவில் பணக்கார குடும்பத்தில் பிறந்த மஸ்க், அவரது தாயாரான மேயி மஸ்க் மூலம் கனடிய குடியுரிமை பெற்றார். மேயி மஸ்க் கனடாவின் சாஸ்கட்செவான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கனடிய குடியுரிமை பெற்ற பிறகு மஸ்க் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

குறிப்புச் சொற்கள்