லாவோஸ் குகையில் சிக்கியவர்களைச் சென்றடையும் நம்பிக்கையில் மீட்புக் குழு

லாவோஸ் குகையில் சிக்கியவர்களைச் சென்றடையும் நம்பிக்கையில் மீட்புக் குழு

1 mins read
e5d127e4-4edc-4bc8-965b-76c80a23a2bb
லாவோஸ் குகையில் சிக்கியுள்ள எழுவரை மீட்கப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. - படம்: இபிஏ
multi-img1 of 2

வியென்டியேன்: லாவோஸ் நாட்டில் உள்ள குகை ஒன்றில் சிக்கியுள்ள எழுவரை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குகையில் சிக்கியவர்களை நெருங்கிவிட்டதாக மீட்பு நடவடிக்கையின் தலைவர் கூறியுள்ளார். ஒரு நாளில் 15 மீட்டர் நீளத்திலான இடையூறுகளை உடைத்து உள்ளே நுழைந்ததையடுத்து அவர் அவ்வாறு சொன்னார்.

அந்த ஏழு பேரும் லாவோசின் மத்தியப் பகுதியில் இருக்கும் சாய்சொம்புன் மாநிலத்தில் உள்ள குகைக்குள் இம்மாதம் 20ஆம் தேதியன்று நுழைந்தனர். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அவர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர் என்று உள்ளூர் மீட்புக் குழு ஒன்றும் லாவோஸ் அரசாங்கம் நடத்தும் லாவோ ஃபட்டானா நியூஸ் செய்தி நிறுவனமும் தெரிவித்தன.

மே 24ஆம் தேதி தாய்லாந்தைச் சேர்ந்த மீட்புக் குழு ஒன்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. சம்பந்தப்பட்ட எழுவர் சிக்கியுள்ள குகைப் பகுதியைச் சென்றடைவதில் தாங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக அக்குழு தெரிவித்தது.

“இந்த தருணத்திலிருந்து, நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது,” என்று மீட்புக் குழுத் தலைவர் கேங்கார்ட் பொங்காவோங் திங்கட்கிழமை (மே 25) சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்