வியட்னாம்: கட்டுமானத் தளத்தில் சிக்கிய சிறுவனை மீட்க முயற்சி

வியட்னாம்: கட்டுமானத் தளத்தில் சிக்கிய சிறுவனை மீட்க முயற்சி

1 mins read
1cac93fb-1806-4111-9591-2fb4a08b590a
வியட்னாமில் கட்டுமானத் தளம் ஒன்றில் கான்கிரீட் சேகரிப்புப் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவர் புத்தாண்டு தினத்துக்கு முதல் நாள் விழுந்தார். அவரை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகக் கடைசி நிலவரப்படி முயற்சிகள் பலனளிக்கவில்லை. படம்: ஏஎஃப்பி -

வியட்னாமில் கட்டுமானத் தளம் ஒன்றில் இருக்கும் கான்கிரீட் சேகரிப்புப் பகுதிக்குள் விழுந்து 10 வயது சிறுவன் சிக்கிக்கொண்டார். இச்சம்பவம் புத்தாண்டு தினத்துக்கு முதல் நாள் நேர்ந்தது.

கடந்த சனிக்கிழமை காலை லை ஹாவ் நம் எனும் அந்தச் சிறுவன் கான்கிரீட் சேகரிப்புப் பகுதிக்குள் விழுந்து சிக்கிக்கொண்டார். உடனடியாக உதவி கேட்டு கத்தியிருக்கிறார்.

அவர் இருக்கும் இடத்தை அடையாளம் காண 35 மீட்டர் ஆழம்கொண்ட அப்பகுதிக்குள் மீட்புப் பணியாளர்கள் கேமராவை இறக்கிப் பார்த்தபோது அவரிடமிருந்து பதில் வரலில்லை.

இந்த கட்டுமானத் தளம் வியட்னாமின் மெக்கோங் டெல்டா வட்டாரத்தில் இருக்கிறது.