தென்கொரியச் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட இறுதி சடலம்

1 mins read
7beea07d-564c-4542-af99-0c7eed884f9d
தென்கொரியாவின் சியோங்ஜூவில் 430 மீட்டர் நீளமான சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்ட தேடல், மீட்புப் பணிகள் திங்கட்கிழமை பின்னேரத்தில் முடிவடைந்தன. - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவில் வெள்ளம் நிரம்பிய சுரங்கப்பாதை ஒன்றிலிருந்து மீட்புப் பணியாளர்கள் இறுதிச் சடலத்தை மீட்டெடுத்து, தேடல் மீட்புப் பணிகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

அந்நாட்டில் பல நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. வரும் நாள்களில் மேலும் அதிக மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வட சுங்சியோங் மாநிலத்தின் சியோங்ஜூ பகுதியில் உள்ள 430 மீட்டர் நீளமான சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டிருந்த தேடல், மீட்புப் பணிகள் திங்கட்கிழமை பின்னேரத்தில் முடிவுக்கு வந்ததாக தென்கொரிய உள்துறை அமைச்சு கூறியது.

அதில் பேருந்து உள்பட மொத்தம் 17 வாகனங்கள் சிக்கியதாகவும், 14 பேர் மாண்டதாகவும் அது தெரிவித்தது.

கூடுதல் சோதனைகளுக்காக, சுரங்கப்பாதை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அது கூறியது.

தென்கொரியாவில் பெய்யும் கனமழையில் இதுவரை 41 பேர் மாண்டனர் என்றும், மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.

அவர்களில் பலர் நிலச்சரிவுகளில் புதையுண்டும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கியும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்