தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாரம் ஒரு முறை கட்டாயம் விடுப்பு வேண்டும்: மலேசிய அமைப்பு

1 mins read
8f35a681-45f2-4c2f-bd61-df3d4c855fd4
மலேசியாவில் 100,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர். - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: வெளிநாட்டுப் பணிப்பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை கட்டாயம் விடுப்பு கொடுக்க வேண்டும் என்று மலேசியாவின் வெளிநாட்டு ஊழியருக்கான அமைப்பு குரல் கொடுத்துள்ளது.

அந்த ஊழியர்கள் சட்ட ரீதியாக உதவிகளை நாடுவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர்கள் எளிதாக முதலாளிகளால் துன்புறுத்தப்படலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

மலேசியாவில் 100,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர், அதனால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதர வேண்டும் என்றும் அந்த அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்