சவால்கள் நிறைந்த ஐ.நா. தலைமைப் பதவிக்குக் கடுமையான நேரடித் தேர்வு

சவால்கள் நிறைந்த ஐ.நா. தலைமைப் பதவிக்குக் கடுமையான நேரடித் தேர்வு

1 mins read
வேட்பாளர்களில் சில்லி, கோஸ்டாரிக்கா நாடுகளைச் சேர்ந்த இரு பெண்மணிகள் அடங்குவர்
9d88810f-8c7e-407e-8b57-62131eb33da9
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அடையாளச் சின்னம். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளால் பிளவுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர் பதவிக்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஏப்ரல் 21, 22) ஆகிய இரு நாள்களில் அவர்கள் நேரடியாக நேர்காணல் செய்யப்படுவர். பல சவால்களை எதிர்நோக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்குத் தலைமையேற்பதற்கான நேர்காணலில் அவர்கள் பல கடுமையான கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரிடும்.

அடுத்த 2027ஆம் ஆண்டுமுதல் செயல்படும் தலைமைச் செயலாளர் பதவிக்கு சிலி நாட்டின் மிஷல் பஷலே, அர்ஜென்டீனாவின் ரஃபையேல் குரோசி, கோஸ்டாரிக்காவின் ரபெக்கா கிரீன்ஸ்பென், சினகலின் மக்கே சாலி ஆகிய நால்வரும் போட்டியிடுகின்றனர். தற்போது இந்த அறிவிக்கப்பட்ட நால்வர் மட்டும் போட்டியிடும் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அடுத்துவரும் மாதங்களில் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

புதிய தலைமைச் செயலாளராகப் பதவியேற்பவருக்கு பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. ஏனெனில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிப்பு அண்மையில் பாதிப்படைந்துள்ளது.

பொருளியல் சக்திவாய்ந்த நாடுகள் நீண்டநாள் கடைப்பிடிக்கப்பட்ட உலக வழக்கங்களை அடிக்கடி அத்துமீறுவதோடு, அமைப்பின் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கி வந்தன. சீர்திருத்தம் செய்யக்கோரியும் செலவைக் குறைக்கவும் அமைப்பின் நிலைப்பாட்டை அர்த்தமுள்ளதாக்கவும் அவை அழுத்தம் கொடுத்துவந்தன.

தற்போதைய வேட்பாளர்களில் சில்லி, கோஸ்டாரிக்கா நாடுகளைச் சேர்ந்த இருவர் பெண்மணிகள் ஆவர்.

குறிப்புச் சொற்கள்