13 மாத உச்சத்தில் ரிங்கிட் மதிப்பு

1 mins read
5396c922-54cc-4787-8cce-94a182d1c7dc
2024 அக்டோபருக்குப் பிறகு ரிங்கிட் மதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட் 13 மாதம் காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதர ஆசிய நாணயங்களை விஞ்சும் வகையில் மலேசிய ரிங்கிட் இரண்டாவது ஆண்டாக வேகமான வளர்ச்சி கண்டு வருவதை இது உணர்த்துவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 0.3 விழுக்காடு உயர்ந்து 4.1720 ஆனது.

2024 அக்டோபருக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான ரிங்கிட் மதிப்பு.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்திற்கான எதிர்பார்ப்புகள் பிரகாசிக்காததாலும் வளர்ச்சி குறித்த நம்பிக்கையின் புத்தெழுச்சியாலும் மலேசிய நாணய மதிப்பு உயர்வு கண்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை ஏழு விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ள ரிங்கிட், வட்டார நாணயங்களிலேயே அதிக எழுச்சி பெற்ற ஒன்றாக உருவெடுத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்