கெந்திங் செல்லும் கார்களுக்கு ரி.5 கட்டணம்

கெந்திங் செல்லும் கார்களுக்கு ரி.5 கட்டணம்

1 mins read
8902ec43-b28c-4ced-95cb-50b69960a54f
கெந்திங் ஹைலண்ட்ஸ். - படம்: பெலாகோ
Google News Preferred Icon

கோலாலம்பூர்: கெந்திங் ஹைலண்ட்ஸ் பகுதிக்குள் காரில் நுழைவோர் வரும் வியாழக்கிழமை (மே 28) முதல் சாலைக் கட்டணமாக ஐந்து ரிங்கிட் (1.60 வெள்ளி) செலுத்தவேண்டும்.

அந்த சாலையை நடத்தும் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. கெந்திங் ஹைலண்ட்ஸ் மலையின் மேல் உள்ள கேளிக்கைப் பூங்காக்கள், சூதாட்டக் கூடங்களுக்குப் போவோருக்கு இந்தக் கட்டணம் பொருந்தும்.

ஜாலான் கெந்திங் ஹைலண்ட்சுக்குள் நுழையும்போது அம்மலையின் கோத்தோங் ஜெயா, கெந்திங் ஹைலண்ட்ஸ் ஆகிய இரண்டு முக்கிய நுழைவாயில்களில் அக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று லிங்காரான் செக்காப் அமைப்பு செவ்வாய்க்கிழமை (மே 26) அறிக்கை மூலம் தெரிவித்தது.

ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் எனும் தனியார் சாலையின் வாயிலாக ஓட்டுநர்கள் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் கெந்திங் உள்ளிட்ட பிரபலமான இடங்களுக்குப் போகலாம். உள்ளூர், வெளிநாட்டுப் பயணிகளிடையே கெந்திங் ஹைலண்ட்சில் அமைந்துள்ள கேளிக்கை இடங்கள் பிரபலமாக உள்ளன.

கார் அல்லது வேன்களை ஓட்டிச் செல்வோர் சாலைக் கட்டணமாக ஐந்து ரிங்கிட் செலுத்தவேண்டும். டாக்சி ஓட்டுநர்களுக்குக் கட்டணம் 3.30 ரிங்கிட்.

ஓட்டுநர்கள் தங்களின் ‘டச் என் கோ’ (Touch ‘n Go) அட்டைகள் அல்லது வங்கிக் கடன் அட்டைகள் அல்லது டெபிட் அட்டைகளைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தலாம்.

மோட்டார் சைக்கிளோட்டிகள், அவசரச் சேவை வாகனங்கள், கெந்திங் ஹைலண்ட்சில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்குக் கட்டணம் கிடையாது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாகட்டணம்சாலை