கேலாங்கில் போக்குவரத்து விபத்தில் சிக்கிய இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அன்று கேலாங் ரோடு, லோரோங் 18 சந்திப்பில் காலை 10.15 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், விபத்தில் சிக்கிய ஒருவரை டான் டோக் செங் மருத்துவமனையிலும் மற்றொருவரை ராஃபிள்ஸ் மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொளிக் காட்சிகள், ஒரு வெள்ளைநிறக் காரை பலர் சூழ்ந்துள்ளதைக் காட்டியது. அந்த கார் சாலையோரமாக மேலே ஏறியிருந்தது. காரின் இருக்கையில் ஒருவர் அப்படியே உட்கார்ந்திருந்தார்.
காரின் பின்பகுதி நசுங்கியிருந்தது. சாலையோர மின்சாரப் பெட்டி ஒன்று சேதமடைந்தது. காரின் முன்பக்கத்தில் ஒரு மரம் சாய்ந்திருந்தது.
ரத்தம் தோய்ந்த ஒருவருக்கு சிலர் உதவி செய்வதை காணொளிக் காட்சியில் பார்க்க முடிகிறது.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. காவல்துறை விசாரித்து வருகிறது.