பேங்காக் விமான நிலையத்தில் சாலைப் பணி, பயண நேரம் அதிகரிக்கலாம்

பேங்காக் விமான நிலையத்தில் சாலைப் பணி, பயண நேரம் அதிகரிக்கலாம்

1 mins read
கூடுதல் பயண நேரத்தைத் திட்டமிட பயணிகளுக்கு அறிவுறுத்தல்
34ad1a6b-e8c2-448b-941a-1ddeb90281c3
பேங்காக்கிலுள்ள சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் ஆகஸ்ட் 31 முதல் 2027 ஏப்ரல் 7 வரை சீரமைப்புப் பணிகள் நடைபெறும் - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்தின் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையச் சாலைகளில் ஏழு மாதங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

பயணிகள் முனையத்திற்குச் செல்லும் பாதைகளில் பணிகள் நடைபெற உள்ளதால் தாமத்தைத் தவிர்க்க பயணங்களை முறையாகத் திட்டமிடுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாலைக் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்கவும் 2026 ஆகஸ்ட் 31 முதல் 2027 ஏப்ரல் 7 வரை சீரமைப்புப் பணிகள் நடைபெறும். மூன்று பாதைகள் மூடப்பட்டு, மாற்றுப் பாதைகள் வழியாக இரண்டு பாதைகள் மட்டுமே போக்குவரத்திற்குத் திறந்துவிடப்படும்.

உச்ச நேரங்களில் போக்குவரத்து மெதுவாக நகரக்கூடும். இதைக் கருத்தில்கொண்டு, பயணிகள் முன்கூட்டியே புறப்பட்டு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சாத்தியமான இடங்களில் ‘ஏர்போர்ட் ரயில் லிங்க்’ ரயில் சேவையைப் பயன்படுத்துமாறும் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
உலகம்தாய்லாந்துபேங்காக்விமான நிலையம்சாலைசீரமைப்பு