ரோஹிங்யா விவகாரம்; அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் மலேசியா

ரோஹிங்யா விவகாரம்; அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் மலேசியா

ரொஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் இனப்படுகொலையில் ஈடுபட்டதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது
படம்: ஓப்பர்ச்சூனிட்டி கிரீன்

22 Nov 2026 - 5:31 pm

1 mins read

கோலாலம்பூர்: ரோஹிங்யா மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக த கேம்பியா, மியன்மாருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் அனைத்துலக நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மலேசியா மதிப்பதாக அதன் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) தெரிவித்தது.

அந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 19) தீர்ப்பளிக்கப்பட்டது.

“பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ள மக்கள் அனைவரையும் பாதுகாப்பதன் தொடர்பில் மலேசியாவின் நிலைப்பாட்டுக்கு இணங்கவே அனைத்துலக நீதிமன்றம் கண்டுபிடித்துள்ள விவரங்கள் அமைந்துள்ளன,” என்று மலேசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்தது.

அனைத்துலகச் சட்டத்தை நிலைநாட்டுவதில் மலேசியா கொண்டுள்ள கடப்பாட்டை அமைச்சு மறுவுறுதிப்படுத்தியது. ஒரு நாடு என்ற முறையில் இனப்படுகொலை ஒப்பந்தத்தின்படி (Genocide Convention) பொறுப்புகளை நிறைவேற்றுவதும் அதில் அடங்கும்.

அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தலைதூக்கும் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா), இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஆசியான் ஆகியவற்றையும் மலேசியா அணுகும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் த கேம்பியா இவ்வழக்கைத் தொடுத்தது. 2017ல் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் ராணுவம் அடக்குமுறைச் செயலில் ஈடுபட்டது இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்று கூறி த கேம்பியா வழக்கு தொடர்ந்தது.

அச்சம்பவத்தால் நூறாயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் மியன்மாரின் அண்டை நாடான பங்ளாதே‌ஷுக்குத் தப்பியோட நேரிட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மியன்மார்மலேசியாதீர்ப்புநீதிமன்றம்நெதர்லாந்து