ரோஸ்மா மேல்முறையீடு தள்ளுபடி; நகைக் கடனைச் செலுத்த உத்தரவு

ரோஸ்மா மேல்முறையீடு தள்ளுபடி; நகைக் கடனைச் செலுத்த உத்தரவு

படம்: இபிஏ

23 Sep 2026 - 7:34 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் லெபனானிய நகைக்கடைக்குச் செலுத்தவேண்டிய 67.5 மில்லியன் ரிங்கிட் (21 மில்லியன் வெள்ளி) அபராதத்திற்கு நிபந்தனையற்ற தடை விதிக்கக்கோரி விடுத்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அவர் லெபனானின் நகை நிறுவனமான ‘குளோபல் ராயல்டி டிரேடிங்’கிற்கு அந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை ரோஸ்மா பின்பற்றவில்லை. காலக்கெடுவை நீட்டிக்கவும் அவர் கோரவில்லை. எனவே, ரோஸ்மாவின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது என்று நீதிபதி முகமது ஃபிருஸ் ஜாப்ரில் தெரிவித்தார்.

மேலும், வழக்குச் செலவாக 30,000 ரிங்கிட் தொகையைச் செலுத்தும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

வழங்கப்பட்ட தீர்ப்பை உடனடியாகச் செயல்படுத்துவதற்கு நகை நிறுவனம் தயாராக உள்ளது.

2018 ஆம் ஆண்டு ரோஸ்மாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையின்போது 43 நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

இருப்பினும் நகைகளை நகை நிறுவனத்திற்குத் திருப்பித் தராததால் ரோஸ்மா பணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
நஜிப் ரசாக்கடன்நீதிமன்றம்