ஆர்டிஎஸ் கட்டணங்கள் ஆண்டிறுதிக்குள் அறிவிக்கப்படலாம்: ஆண்டனி லோக்

ஆர்டிஎஸ் கட்டணங்கள் ஆண்டிறுதிக்குள் அறிவிக்கப்படலாம்: ஆண்டனி லோக்

படம்: மலேமெயில்

20 Oct 2026 - 7:05 pm

1 mins read

கோலாலம்பூர்: ஜோகூர் பாரு - சிங்கப்பூர் ‘ஆர்டிஎஸ்’ விரைவு ரயில் இணைப்புத் திட்டத்துக்கான கட்டணங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஆர்டிஎஸ் சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் கட்டணம் குறித்து தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

ஆர்டிஎஸ் சேவை மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்புத் திட்டம் என்பதால் ஆர்டிஎஸ் செயற்குழு கூட்டறிக்கை வெளியிடும் என்றார் திரு லோக்.

இம்மாதம் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், நிலப் போக்குவரத்து ஆணையமும் மலேசியப் போக்குவரத்து அமைச்சும் மாற்றியமைக்கப்பட்ட காலக்கெடு குறித்து ஆர்டிஎஸ் செயற்குழு தங்களிடம் தெரிவித்ததாகக் கூறின.

இதற்குமுன் அந்தச் சேவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஆர்டிஎஸ்மலேசியாபோக்குவரத்துஅமைச்சுகட்டணம்