ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது: உக்ரேன் ராணுவம்

ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது: உக்ரேன் ராணுவம்

1 mins read
02dccee5-1644-4648-a434-334b2dbc801d
உக்ரேனின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ரஷ்யா இரவு முழுதும் சில ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் பாய்ச்சியுள்ளதாக கியவ்வின் ராணுவம் தெரிவித்துள்ளது.  - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

கியவ்: உக்ரேனின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ரஷ்யா இரவு முழுதும் சில ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் பாய்ச்சியுள்ளதாக உக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த ஆயுதங்களில் பலவற்றை ஆகாயத் தற்காப்புச் சாதனங்கள் அழித்துள்ளதாக அது கூறியது.

அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கையை அது தெரிவிக்கவில்லை.

ரஷ்யத் தாக்குதல்களில் 4 வயது குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்ததாக கிழக்கில் உள்ள கார்கீவ் வட்டாரத்தின் ஆளுநர் ஒலேஹ் சினிஹுபோவ், டெலிகிராம் செயலியில் பதிவிட்டார்.

கார்கீவ் நகரில் எரிவாயுக் குழாய் ஒன்று சேதமுற்றது என்றும் குறைந்தது இரண்டு வீடுகள் அழிந்துபோயின என்றும் அதன் மேயர் இஹோர் தெரகோவ் கூறினார். அதோடு, பத்து வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர் சொன்னார்.

அந்த விவரங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. ரஷ்யாவிடமிருந்தும் எந்தக் கருத்தும் கிடைக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
ரஷ்யாஆளில்லா வானூர்திஉக்ரேன்