தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனில் கடுமையான தாக்குதலை நடத்திய ர‌ஷ்யா

1 mins read
5b04f2a9-d85f-4666-a077-24eab2ffe409
தாக்குதல் நடத்தப்பட்ட எல்விவ் வட்டாரம் போலந்தின் எல்லைக்கு அருகே உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

எல்விவ்: உக்ரேனின் எல்விவ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு ர‌ஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.

அதில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒன்பது பேர் காயமடைந்தனர். கட்டடங்கள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன.

தாக்குதல் நடத்தப்பட்ட எல்விவ் வட்டாரம் போலந்தின் எல்லைக்கு அருகே உள்ளது.

இதனால் நேட்டோ அமைப்பின் உறுப்பினரான போலந்து அதன் எல்லையில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் தனது வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை உச்ச விழிப்பு நிலையிலும் போலந்து வைத்துள்ளது.

உக்ரேன் எல்லை அருகே உள்ள இரண்டு போலந்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் போலந்துக்குள் சில ர‌‌ஷ்ய வானூர்திகள் நுழைந்தன.

அந்த வானூர்திகள் உடனடியாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன.

அதேபோல் டென்மார்க், மியூனிக், நார்வே உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வப்போது வானூர்திகள் வட்டமிடுகின்றன. இது ஐரோப்பிய விமானத்துறைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்