நிலவிற்கு மீண்டும் விண்கலம் அனுப்பிய ரஷ்யா

1 mins read
d9e1313e-b353-47d7-b2ad-406c676afbd6
ரஷ்யா மீண்டும் நிலவிற்கு விண்கலம் அனுப்பியிருப்பது அந்நாட்டு விண்வெளித் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனக் கூறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ: ரஷ்யா ஏறக்குறைய 50 ஆண்டுகளில் நிலவு குறித்து தனது முதல் ஆய்வை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

உக்ரைன்மீது ரஷ்யா போர்த் தொடுத்ததால் அந்நாட்டின் விண்வெளித்துறை முடங்கியது. தற்போது ரஷ்யா மீண்டும் நிலவிற்கு விண்கலத்தை அனுப்பியிருப்பது அத்துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

விண்வெளி ஆய்வில் முன்னோடியாக இருந்த ரஷ்யா 1976க்குப் பிறகு மேற்கொள்ளும் முதல் சந்திரப்பயணம் இதுதான். ரஷ்ய விண்வெளி நிறுவனம் ஒளிபரப்பிய நேரடிக் காட்சிகளின்படி, விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லூனா-25 விண்கலம் ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.10 மணிக்கு ஏவப்பட்டது.

சந்திரனின் சுற்று வட்டப்பாதையை லூனா-25 ஐந்து நாள்களில் அடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. சந்திரனின் தென்துருவப்பகுதியில் அதைத் தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

“சந்திரனின் தென்துருவத்தில் விண்கலம் இறங்குவது வரலாற்றிலே இதுதான் முதல்முறை. இதுவரை ஏவப்பட்ட அனைத்து விண்கலங்கலும் நிலநடுக்கோட்டுப் பகுதியில்தான் இறங்கின,” என ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூத்த அதிகாரியான அலெக்சாண்டர் புளோகின் அண்மைய நேர்காணலில் கூறியிருந்தார்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி லூனா-25 நிலவில் தனது ஆய்வைத் தொடங்கும் எனத் தகவல் அறிந்த வட்டாரம் ஏஎஃப்பியிடம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்