தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்ய ராணுவத்துடன் புட்டின் சந்திப்பு; உக்ரேன் போர் குறித்து பேச்சு

1 mins read
bd84a33a-46c2-4327-af0d-de6b6e0c3d58
படம்: - ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரேனில் நிலவிவரும் போர் குறித்து தமது ஆக உயரிய ராணுவ அதிகாரிகளுடன் கலந்து பேசியிருக்கிறார். அவர்களில் தற்காப்பு அமைச்சர் செர்காய் ஷொய்குவும் ஒருவர்.

ரொஸ்டோவில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் திரு ஷொய்கு, முதன்மைச் செயலாக்க இயக்குநர் அலுவலகத்தின் தலைவர் ஜெனரல் சர்காய் ரூட்ஸ்கொய், ராணுவ அதிகாரி வெலரி கெராசிமோவ் ஆகியோருடன் திரு புட்டின் கூட்டத்தில் கலந்துகொண்டதை ரஷ்ய அதிபர் மாளி்கை வெளியிட்ட படங்கள் காட்டின.

அப்போது புதிய வகை ராணுவக் கருவிகள் காண்பிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் மாளிகை கூறியது. சிறப்பு ராணுவ நடவடிக்கை குறித்த மேம்பாடுகள் பற்றி அதிபரிடம் விளக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரொஸ்டோவில் உள்ள ராணுவத் தலைமையகத்திற்கு கடைசியாக திரு புட்டின் சென்ற மாதம் சென்றிருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்