உக்ரேன் ஏவிய 36 வானூர்திகள் அழிக்கப்பட்டன: ரஷ்யா

1 mins read
de573fdb-82ee-4948-bd97-cfd95e57e8d3
ரஷ்யாவின் பெல்கரோட் பகுதியில் உக்ரேனிய வானூர்தித் தாக்குதலில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்துக்குச் சேதம் ஏற்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: தென்மேற்கு ரஷ்யாவின் சில பகுதிகளைக் குறிவைத்து இரவோடு இரவாக உக்ரேன் ஏவிய 36 ஆளில்லா வானூர்திகளை ரஷ்யாவின் வான் தற்காப்பு முறை அழித்துவிட்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரேன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பகுதியில் 15 வானூர்திகளும் தலைநகர் மாஸ்கோவுக்கு தெற்கே சில நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லிப்பெட்ஸ்க் பகுதியில் ஒன்பது வானூர்திகளும் அழிக்கப்பட்டதாக டெலிகிராம் செயலியில் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) கூறியது.

தென்மேற்கு ரஷ்யாவின் வோரோனெஸ், பிரையன்ஸ்க் பகுதிகள் ஒவ்வொன்றிலும் நான்கு வானூர்திகளும் அவற்றுக்கு அருகிலுள்ள ஓரியோல், பெல்கரோட் பகுதிகள் ஒவ்வொன்றிலும் இரண்டு வானூர்திகளும் அழிக்கப்பட்டன.

வானூர்தித் தாக்குதல்கள் காரணமாக எவருக்கும் காயமோ பொதுச் சொத்துகளுக்குப் பெருத்த சேதமோ ஏற்படவில்லை என லிப்பெட்ஸ்க், பிரையன்ஸ்க் ஆளுநர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்