மாஸ்கோ: உக்ரேனுடன் நெடுங்கால அமைதி வேண்டும் என்றும் தற்காலிக அமைதி நடவடிக்கைகள் தீர்வாக இருக்காது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
நெடுங்கால அமைதி நடவடிக்கை இரு தரப்புக்கும் உள்ள அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் என்று அது கூறியது.
அமெரிக்கா தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் அதில் ரஷ்யாவுக்கு ஈடுபாடில்லை என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையே, திங்கட்கிழமை (பிப்ரவரி 24) உக்ரேனுக்கு உதவும் ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய நாட்டு பொதுச் சபையில் உக்ரேனிலிருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு முன்மொழிந்துள்ளன.
தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு சாதகமாகச் செயல்படக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.