தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேன் நடத்திய தாக்குதலால் ரஷ்யாவுக்குக் கடும் பாதிப்பு

1 mins read
de7890d0-7983-42e1-ac8b-5dc0e68d1821
தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் உள்ள பல விமான நிலையங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 3) இரவு நேரத்தில் ரஷ்யா மீது உக்ரேன் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

ரஷ்யாவின் எரிபொருள், எரிசக்தி ஆலைகள் குறிவைக்கப்பட்டன.

தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் அஸ்ட்ராக்கன் பகுதியில் தீ மூண்டது.

ரஷ்யாவில் உள்ள பல விமான நிலையங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ஆளில்லா வானூர்தி கீழே விழுந்ததில் தீ மூண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அஸ்ட்ராக்கன் அருகே உள்ள எரிவாயு ஆலையை உக்ரேன் தாக்கியதாக அறியப்படுகிறது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

வொலோகிராட் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது அந்த விமான நிலையம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் எரிசக்தி, போக்குவரத்து, ராணுவ உள்கட்டமைப்பு ஆகியவற்றை அழிக்க தாக்குதல் நடத்துவதாக உக்ரேன் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்