கியவ்: உக்ரேன் மீது ரஷ்யா ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதல் உக்ரேனின் கிழக்கு, தெற்கு, மத்தியப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) இரவு நடைபெற்றது.
இதில் குறைந்தது ஐவர் காயமடைந்ததுடன் பொதுமக்கள் தொடர்பான உள்கட்டமைப்புகளும் கடைகளும் சேதமடைந்தன.
பொதுமக்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த இரவுநேரத் தாக்குதலால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்ற விவரங்களை உக்ரேன் வெளியிடவில்லை.
பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் தாக்கப்படுவதை நிறுத்தும் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டினும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் இணக்கம் தெரிவித்ததை அடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.