செங்கடலில் சுறா மீன் தாக்கி ஆடவர் மரணம்

செங்கடலில் சுறா மீன் தாக்கி ஆடவர் மரணம்

10 Jun 2023 - 7:22 pm

1 mins read

எகிப்தின் செங்கடல் கடற்கரையில் சுறா மீன் தாக்கி ர‌ஷ்ய ஆடவர் ஒருவர் மாண்டார்.

ஆடவர் செங்கடலில் குளித்தபோது டைகர் வகை சுறா மீன் அவரைத் தாக்கியதாக எகிப்தின் சுற்றுச்சூழல் அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டது.

ஆடவரை சுறா தாக்கும் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

காணொளியில் ஆடவர் சுறாவின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

மாண்ட ஆடவர் 20 வயதுகளில் இருந்தார் என்று ர‌ஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆடவர் 1999ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது.

மாண்ட ஆடவர் சுற்றுலாப்பயணி இல்லை என்றும் அவர் நிரந்தரவாசி என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடவரைத் தாக்கிய சுறாவை அதிகாரிகள் பிடித்துள்ளனர். சுறா எப்போதுமில்லாத வகையில் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறினர்.

செங்கடலில் இரண்டு நாள்களுக்கு எந்த நடவடிக்கையும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் மத்தியில் செங்கடல் மிகவும் பிரபலம். அங்கு சுறாக்களை அடிக்கடி காணலாம். இருப்பினும் நீச்சல் பகுதிகளில் அது மனிதர்களை தாக்குவது அரிதான ஒன்று.

குறிப்புச் சொற்கள்