கியவ்: உக்ரேனியத் தலைநகர் கியவை ரஷ்ய ராணுவம் கடுமையாகத் தாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அதிகாலை ஏவுகணை, ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு கிய்வ் நகரின் பல இடங்கள்மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
பல இடங்களில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல்களில் ஒருவர் மாண்டதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.
இந்தத் தாக்குதல் காரணமாகக் கியவ் நகரின் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தாக்குதலில் ஒரு ரயில் சேதமடைந்ததாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.
தாக்குதல் காரணமாகப் பல குடியிருப்புக் கட்டடங்களில் தீச்சம்பவங்கள் ஏற்பட்டது.
அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டதால் குடியிருப்புக் கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மக்களும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
கியவ் நகரம் வானூர்திகள் மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகள்மூலம் தாக்கப்பட்டதை உக்ரேனிய ஆகாயப் படை உறுதி செய்தது.
தொடர்புடைய செய்திகள்
சேதங்கள் அதிகம் இருக்காமல் இருக்க டார்ன்ஸ்ட்கி பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஒரு கடைத்தொகுதியிலும் தீச்சம்பவம் ஏற்பட்டது.