‘அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் நேரத்தை மாஸ்கோ மாற்றக்கூடும்’

1 mins read
789b492d-7a93-40ee-aaaf-d6e7d6c9a435
ரஷ்யத் தற்காப்புக் குழுமத்தின் தலைவர் டுமா அன்ட்ரெய் கர்டாபொலொவ். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக மிரட்டல்கள் அதிகரித்தால், அதன் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நேரத்தை மாஸ்கோ மாற்றக்கூடும் என்று ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அன்ட்ரெய் கர்டாபொலொவ் கூறியதாக ‘ஆர்ஐஏ’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ அதன் அணுவாயுதக் கொள்கை ஆவணத்தை மாற்றக்கூடும் என்று அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்த முன்னாள் ஜெனரலின் கருத்துகள் வந்துள்ளன.

“சவால்களும் மிரட்டல்களும் அதிகரிப்பதை உணர்ந்தால், அணுவாயதங்களைப் பயன்படுத்தும் நேரம், அதன் தொடர்பிலான முடிவுகள் குறித்து நாம் கொள்கை ஆவணத்தில் திருத்தங்களைச் செய்யலாம்,” என்று திரு கர்டாபொலொவ் கூறியதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

“இருப்பினும், குறிப்பிட்டு எதையும் சொல்வதற்கு இப்போது சரியான நேரம் அல்ல,” என்றார் அவர்.

ரஷ்யாவின் 2020ஆம் ஆண்டு அணுவாயுதக் கொள்கை ஆவணம், அதன் அதிபர் எப்போது அணுவாயுதத்தைப் பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறது.

குறிப்புச் சொற்கள்