42 உக்ரேனிய நகரங்களைக் கைப்பற்றியது ரஷ்யா

42 உக்ரேனிய நகரங்களைக் கைப்பற்றியது ரஷ்யா

1 mins read
7736a0f3-fa5a-4c3f-a3dd-6d5e1eeaf90a
உக்ரேன்மீது ரஷ்யா படை எடுத்து இருமாதங்களாகிவிட்டன. படம்: ராய்ட்டர்ஸ் -

உக்ரேனில் 42 சிறுநகரங்களையும் கிராமங்களையும் ரஷ்யப் படையினர் கைப்பற்றிவிட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

உக்ரேன்மீது ரஷ்யா படை எடுத்து இருமாதங்களாகிவிட்ட நிலையில், இப்போது உக்ரேனின் கிழக்கு மற்றும் தென்பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில், உக்ரேனின் தென்பகுதியையும் கிழக்கிலுள்ள டோன்பாஸ் வட்டாரத்தையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்யா இலக்கு கொண்டுள்ளது என்று மேஜர் ஜெனரல் ரஸ்டம் மினகாயெவ் எனும் ரஷ்ய ராணுவ உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

அப்படி அவ்விரு பகுதிகளும் ரஷ்யா வசமாகிவிட்டால், அதன்பின் கருங்கடலில் அமைந்துள்ள உக்ரேனியத் துறைமுகங்களையும் கைப்பற்ற அது வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.